யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையில் நேற்று நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது, இலங்கையை சர்வதேச பொறிமுறையின் முன்னிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குறித்த தீர்மானத்தை, எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா வழிமொழிந்ததையடுத்து, தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

