டிடிவி தினகரனுடன் முதல்வர் ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு

2150 44

டிடிவி தினகரனுடன் முதல்வரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு இன்று சந்தித்து பேசினார்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பிறகு டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்றும், முதல்வர் தரப்பு எம்.எல்.ஏ.க்களில் உள்ள சிலீப்பர் செல்கள் சரியான சமயத்தில் வெளியே வருவார்கள் என்றும் டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான பிரபு இன்று டிடிவி தினகரனை சந்தித்தார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. முதல்வரின் ஆதரவாளரான பிரபு, எதிரணி தலைவரை சந்தித்தது அரசியல் அ.தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment