வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி!

1119 19

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் உள்ள குளத்திற்குள் முச்சக்கரவண்டி ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வைரவப் புளியங்குளம் நோக்கி குளக்கட்டு வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், வைரவப்புளியங்குளம் பகுதியில் இருந்து பண்டாரிக்குளம் நோக்கி அந்த வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதுவதை தவிர்ப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கரவண்டியில் இருந்து குதித்துள்ளதுடன் முச்சக்கரவண்டியை தள்ளிவிட்டுள்ளார்.

இதன்போதே, குறித்த முச்சக்கரவண்டி குளத்திற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும், இதன்போது எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment