துறைமுக நகர திட்டத்துக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு

9635 81

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு துறைமுக பிரதேசத்தில் சேர்கின்ற கழிவு நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த பிரதேசத்தில் இருந்து மாதம்பிட்டிய கழிவகற்றும் தொகுதி அமைந்துள்ள பகுதி வரையான 5.5 கி.மீ. நீளத்துக்கு 900 மி.மீ பரப்பினை கொண்ட பிரதான கழிவு நீர் குழாய்யொன்றை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த மார்க்கத்தில் அமைந்துள்ள பேரே வாவிக்கு குறுக்காக குறித்த குழாயினை அமைப்பதற்காக அவகாசம் காணப்படுவதால் தற்போது அவ்விடத்தில் காணப்படுகின்ற கழிவு நீர் குழாய் மார்க்கங்கள் இரண்டுக்காக பொது குழாய் மார்க்கம் ஒன்றை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அப்பகுதிக்கான பொது குழாய் வசதியினை பொருத்துவதற்கான டெப் அத்திவாரத்தினை அமைக்கும் ஒப்பந்தத்தினை 48 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s ELS Construction (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Leave a comment