டி.கே.பி.தசநாயக்கவுக்கு எதிரான விசாரணைகளை CID யிடம் இருந்து நீக்க முடியாது!

263 0

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் 09 பேருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதை நீக்குவதற்கு உத்தரவிடக் கோரி பிரதிவாதிகள் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

அவ்வாறு உத்தரவு வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மனு இன்று (22) விசாரணைக்கு வந்தபோதே நீதவான் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

அதேநேரம் கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 08 வது மற்றும் 09 வது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கவும் மறுக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தேகநபர்களை எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.தற்போது பிணை வழங்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மே மாதம் 03ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment