யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த குடும்ப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச்சேர்ந்த 47 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்
மேற்படி பெண்ணின் கணவர் அவர்களது மகளை கல்விச்சுற்றுலாவிற்கு கூட்டிச்சென்றபடியால் இப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்
நேற்றையதினம் நீண்டநேரமாக வீட்டில் ஆள்நடமாட்டம் காணப்படாததையடுத்து அயலவர்கள் சென்று பார்த்தபோது குறித்த பெண் இறந்த நிலையில் கிணற்றில் காணப்பட்டுள்ளார்.
அதனையடுத்து சுன்னாகம் பொலிசாருக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் இறந்த நிலையிலிருந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

