சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரைக் கைது செய்ய முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மிஹிந்தலையில் இடம்பெற்றுள்ளது.
மஹாகனதராவ என்ற பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக மிஹிந்தலை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து குறித்த சந்தேக நபரைக் கைது செய்யுமுகமாக நேற்று (14) பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் குறித்த சந்தேக நபரைக் கைது செய்ய முயற்சித்தபோது, சந்தேக நபர் திடீரென கையில் இருந்த போத்தலால் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தினார். இதில் உத்தியோகத்தர் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.
உடனே அவருடன் சென்றிருந்த ஏனைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபரை கைது செய்தனர்.
காயமடைந்த உத்தியோகத்தர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

