மைத்திரி – ரணில் அரசை பாதுகாக்க வல்லரசு நாடுகள் முயற்சி !

222 0

மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற முயற்சிகளில் உலகின் வல்லரசு நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

2015ல் மஹிந்த ராஜபக்ஷவை அகற்றும் திட்டத்தை முன்னெடுத்தவர்கள் இப்போது கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளார்கள். உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் இடம்பெறும் வெளிநாட்டுத் தலையீடுகள் தீவிர கரிசனைக்குரியது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் அமெரிக்க மற்றும் இந்தியத் தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a comment