பழைய தொழிலுக்கே ஓ.பி.எஸ். அனுப்பி வைக்கப்படுவார்: தினகரன்

203 0

ஓ.பி.எஸ். இனி வரும் தேர்தலில் போட்டியிடும் தொகுதியில் டெபாசிட் இழப்பார் எனவும் பின்னர் அவர் ஏற்கனவே என்ன தொழில் செய்தாரோ அந்த தொழிலுக்கே அனுப்பி வைக்கப்படுவார் எனவும் தினகரன் கூறியுள்ளார்,

தஞ்சையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தோல்வி அடைந்தததற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநலம்தான். அரசியலில் இருந்து அவர் விரைவில் ஓரங்கட்டப்படுவார்.

வரும் தேர்தலில் அவர் போட்டியிடும் தொகுதியில் டெபாசிட் இழப்பார். பின்னர் அவர் ஏற்கனவே என்ன தொழில் செய்தாரோ (டீக்கடை) அந்த தொழிலை செய்ய அனுப்பி வைக்கப்படுவார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்லா துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. பொதுப்பணித்துறை முதல் நெடுஞ்சாலைத்துறை வரை 30 முதல் 40 சதவீதம் வரை கமி‌ஷன் கொடுத்தால்தான் பணி ஒதுக்கீடு நடக்கிறது.ஊழல் நிறைந்த இந்த ஆட்சியை மக்கள் விரைவில் அகற்றுவார்கள்.

தமிழகத்தில் ஒருபோதும் காவி ஆட்சி வராது. நாம் பொங்கல் பண்டிகைக்கு வீடுகளில் காவி நிறத்தை அடிப்போம். அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மு.க.ஸ்டாலின் போக்குவரத்து துறையை சீரமைப்பது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மு.க.ஸ்டாலின் கொடுத்து எடப்பாடி செய்வாரா? எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

அ.தி.மு.க.வில் இருந்து தொண்டர்கள்தான் நீக்கப்பட்டு வருகிறார்கள். கடைசியில் அங்கே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள்தான் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தஞ்சையில் தினகரன் அணியின் வக்கீல்கள் பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தினகரன் பேசியதாவது:-

அ.தி.மு.க.வை மீட்டெடுக்கும் வரை நமது உரிமைகளை பறிகொடுக்காமல் இருக்கவும், கட்சி பெயரை பயன்படுத்தவும், குக்கர் சின்னத்தை ஒதுக்கவும் தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பெற வாய்ப்பு உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. எல்லா தொகுதிகளையும் ஆர்.கே.நகர் தொகுதிபோல் மாற்ற நம்மால் முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment