சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை, தி.மு.க. அகற்ற நினைப்பது தவறானது – தமிழிசை

1 0

சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை எடுப்போம் என்று தி.மு.க. சொல்வது தவறான கருத்து என பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது அரசியல் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் முதல்-அமைச்சராக பணியாற்றிய பெண் தலைவர். குற்ற வழக்குகள் இருக்கட்டும். குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டதாக இருக்கட்டும். தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா முக்கிய பங்கை வகித்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அப்படியிருக்கும் போது அவரது படத்தை திறப்பதில் எந்தவித தவறும் இல்லை. நீங்கள் ஊழலை ஆதரிக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். தமிழகத்தில் எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. விஞ்ஞான பூர்வமாக ஊழல்கள் செய்து இருப்பதாக கருத்துகள் உள்ளன.

சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை எடுப்போம் என்று தி.மு.க. சொல்வது தவறான கருத்தாகும். அவர்கள் வைத்தால் நாங்கள் அகற்றுவோம் என்று நினைப்பது சரியானது அல்ல. இது நல்ல அரசியலுக்கு அழகல்ல. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்விற்கு மரியாதை தரவேண்டும். மறைந்த தலைவர் மீது தாக்குதல் நடத்த வேண்டுமா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்

Posted by - February 5, 2018 0
டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை வழங்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்தால் மக்கள் புரட்சி ஏற்படும்: தினகரன் ஆதரவு வக்கீல் பேட்டி

Posted by - November 29, 2017 0
ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்தால் மக்கள் புரட்சி ஏற்படும் என்று தினகரன் ஆதரவாளரும், வாணியம்பாடியைச் சேர்ந்த வக்கீலுமான எம்.ஜே.பாலசுப்பிரமணி கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

Posted by - March 14, 2017 0
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை என ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று மாலை கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிடுகிறது

Posted by - November 24, 2018 0
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை இன்று மாலை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு பார்வையிட உள்ளது.

Leave a comment

Your email address will not be published.