பதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? –

1 0

பதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பதிவுத்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை கொண்டுவரும் இத்திட்டத்தின் மூலம் 575 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி வசதிகளுடன் கூடிய மூன்று இணையதள தொடர்பு வசதிகள் கொடுக்கப்பட்டு, மாநில தகவல் தரவு மையத்துடனும், புனேயில் உள்ள பேரிடர் மீட்பு தரவு மையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டிய ஆதாரங்களை முன்பே அனுப்பி சரிபார்க்கும் முறை முதல், ஒரே வருகையில் ஆவணங்களை பதிவு செய்து உடனுக்குடன் வழங்கும் வசதி வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஆவணப்பதிவு தொடர்பான எல்லா சேவைகளும் கணினி வழியாக அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால், பொதுமக்கள் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லவேண்டியது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

முன்சரிபார்ப்பு என்ற புதிய முறை நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சரிபார்த்த பின் ஆவணம் பதிவு செய்யும் நாள் மற்றும் நேரத்தை முன்னரே இணையவழி பதிவு செய்து அந்த நாளில் ஆவணப்பதிவை மேற்கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு பதிவு சேவைகளின் நிலை குறித்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் உடனுக்குடன் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது இணையவழி பட்டாமாறுதல் வசதி கிராம புல எண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை விரைவில் நத்தம் மற்றும் நகரபுல எண்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

புதிய வசதியால் வில்லங்கச்சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவணநகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆவணப் பதிவின்போது மோசடி பத்திரப்பதிவுகளை குறைக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சொத்தின் உரிமையாளரின் கைரேகையை ஒப்பீடு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஆள்மாறாட்டங்கள் பெரும் அளவில் தவிர்க்கப்படும்.

இணையவழி கட்டணங்களை செலுத்தும் முறை மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தற்போதுள்ள 6 வங்கிகளுடன் மேலும் 5 வங்கிகளை சேர்த்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாரத மாநில வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, அலகாபாத் வங்கி, ஐடிபிஐ வங்கி, சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி, விஜயா வங்கி ஆகிய 11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தற்போது அனைத்து கட்டணங்களையும் செலுத்தலாம்.

இதுமட்டுமின்றி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174-ல் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இச்சேவைகள் குறித்த விவரங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

1500 இழுவை படகுகளுக்காவது அனுமதியளிக்கப்பட வேண்டும்

Posted by - July 13, 2016 0
தமிழகத்தின் 250 இழுவை படகுகளை தமது கடற்பகுதியில் அனுமதிப்பது என இலங்கை அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவலை தமிழக கடற்றொழிலாளர்கள் வரவேற்றுள்ளார்கள். தமிழகத்தின் இயந்திர படகு உரிமையாளர்…

எச்.ராஜா மீது வழக்கு தொடராமல் வேடிக்கை பார்ப்பதா?- வைகோ

Posted by - March 8, 2018 0
அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசும் எச்.ராஜா மீது வழக்கு தொடராமல் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என வைகோ கூறியுள்ளார்.

எனது தந்தையின் புகழை களங்கப்படுத்தவே அவதூறு-மு.க.அழகிரி

Posted by - October 12, 2016 0
எனது தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றும், அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர கமி‌ஷனர்…

சாலை விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Posted by - August 3, 2018 0
கோவை சுந்தராபுரத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை

Posted by - February 1, 2018 0
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவில் கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் ஜனவரி மாதம் பழைய சம்பளத்தையே எம்.எல்.ஏ.க்கள் பெற இருக்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published.