தனி அரசாங்கம் அமைந்தால் 19 இன்படி இவ்வாறு தான் இருக்கும்- சட்டவல்லுநர்

508 0

தேசிய அரசாங்கத்தைக் கலைத்து ஏதாவது ஒரு கட்சி தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால், அந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து  கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் மேனக ஹரன்கஹவிடம் வினவிய போது,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பிரகாரம் தனிக் கட்சியொன்று அரசாங்கம் அமைக்கும் போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தில் தனி அரசாங்கம் ஒன்று அமையும் போது அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்துக் கூறப்பட்டிருந்தாலும், கூட்டரசாங்கம் என்பதற்கு வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணம் எதுவும் கூறப்படவில்லை.

தனிக் கட்சியொன்று தமக்குரிய போதிய பெரும்பான்மைப் பலம் இல்லாத போது வேறு ஒரு கட்சியை கூட்டணியாக சேர்த்தால், அது தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவுக்குள் வருவதற்கும் இடம்பாடுள்ளது.  இதனால், அவ்வாறான ஒரு அரசாங்கத்துக்கு 30 இற்கு அதிகமாக அமைச்சர்களை கொண்டிருக்க முடியும் எனவும் அவர் விளக்கம் கூறியுள்ளார்.

Leave a comment