மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பலமான ஆட்சி வடகிழக்கில் ஏற்பட வேண்டும் – சம்பந்தன்(காணொளி)

1540 39

மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பலமான ஆட்சி வடகிழக்கில் ஏற்பட வேண்டும் என்றும், பலமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு மற்றவர்களுடன் கூட்டுசேர வேண்டியிருந்தால் அதற்கு தாம் பின்நிற்கப்போவதில்லை எனவும் எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment