வாக்களிப்பு நிலையத்தில் தமிழரசுக் கட்சியின் வன்முறை!

296 0

கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலைய தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய பேரவையையினை சேந்த கடமையாளர்களை பொலிஸாரின் உதவியுடன் மூன்று தடவைகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்.மாநகர சபையின் மேயர் பதவிக்காக போட்டியிடும் இமானுவல் ஆனோட் வெளியேற்றியுள்ளார்.

குறித்த கடமையாளர்கள் இருவர் பொலிஸாரின் உதவியுடன் மண்டபத்தில் இருந்து இன்று காலை வெளியேற்றப்பட்டனர். இவ் வன்முறை தொடர்பாக தெரிவத்தாட்சி அலுவலர் அகிலனிடம் முறையீட்டதை அடுத்து தெரிவத்தாட்சி அலுவலர் அகிலனால் தொலைபேசி மூலமாக குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டநிலையில் மீள கடமையாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். எனினும் நண்பகல் ஒரு கடமையாளர் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.

பின்னராக பிற்பகல் வேளையில் பொலிசாருடன் வந்த ஆர்னோல்ட் இரு கடமையாளர்களையும் பொலிசாரைக் கொண்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகின்றது. தெரிவத்தாட்சி அலுலவர் ஊடாக வழங்கப்பட்ட கடிதம் மற்றும் தெரிவத்தாட்சி குறித்த சம்பவத்தையடுத்து தெரிவத்தாட்சி அலுவலரின் உறுதிபடுத்தி கடிதம் ஆகியன இருந்த நிலையிலும் தமிழரசுக் கட்சி அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் தேர்தல் வன்முறை தொடர்பாக தேர்தல் அலுவலகத்தில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment