யாழில் அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்பு!!

345 0

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் மக்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், யாழில் 1 மாநகரசபை 3 நகரசபை 13 பிரதேசசபைகள் என 17 உள்ளூராட்சிசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது.மிகவும்அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment