ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது சற்று முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரின் வீட்டிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

