கிளிநொச்சியில், 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 பேர் வாக்களிக்க தகுதி!!-ந்தரம் அருமைநாயகம்

4898 0

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 வாக்களார்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரச அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சியில்  கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு வட்டாரத்தில் நேரடியாகவும், பட்டியலூடாகவும் 66 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 638 பேர்  தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான அனைதது ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளில் 1500 அரச உத்தியோகத்தர்களும், 300 பொலிஸாரும்  கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு விசேட அதிரடிப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோரும் தோ்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

வேட்பு மணுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று வரை 71 தேர்தல் விதிமுறை மீறல்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்கள்  வாக்களிக்க  செல்லும் போது அவர்களுக்கு இடையூறுகள்  ஏற்படுத்தப்பட்டால்  முறைபாடு செய்வதற்கும் விசேட மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொலைபேசி இலக்கமான 0213900154  க்கு தொடர்பை ஏற்படுத்தி முறைபாடுகளை மேற்கொள்ள முடியும்” எனவும்,

“வாக்களார்கள் முடியுமானவரை காலையிலேயே சென்று தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

Leave a comment