அமெரிக்கா கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம்: சிரியா அரசு குற்றச்சாட்டு

231 0

சிரியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் போர் குற்றம் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.

சிரியா நாட்டின் பல பகுதிகளை ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றி வருகின்றனர். தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக சிரியா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டுப் படையினர் சிரியா அதிபரின் ஆதரவு படையினருக்கு எதிராக தற்காப்புக்காக நடத்திய தாக்குதலில் 100 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த படுகொலையை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும். அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம் என்று சிரியா அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிரியா நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையை சட்டவிரோதம் என்றும், அதனை கலைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment