“ONKEL Hassan” “மாமா ஹசன்” நடமாடும் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் அடையாளம்!!!

14142 0

“ONKEL Hassan” “மாமா ஹசன்” கண்காட்சியின் தொடக்க புள்ளியாக ஹசன் இருக்கிறார்.”மாமா ஹசன்” அவர்களின் புலம்பெயர்வு வாழ்க்கையை உதாரணம் காட்டி யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் இக் கண்காட்சி எடுத்துக்காட்டுகின்றது.  இக்  கண்காட்சி புலம்பெயர் தொடர்ச்சியை தெளிவாக கோடிட்டு காட்டுகின்றது.பல்லின மக்களின்   புலம்பெயர்வு வெவ்வேறு காரணங்களுக்காக இருந்தாலும். “மாமா ஹசன்” என்பது தொழிலாளர் பிரவேசத்தின் ஒரு எடுத்துக்காட்டு. இக் கண்காட்சி தற்போது கடந்த காலத்தை ஒருங்கிணைத்து வெளிக்காட்டுகின்ற வேளையிலும், ஒரு பகுதி முதல் தலைமுறையின் தொழிலாளர் குடியேறியவர்களைக் காட்டுகிறது, இரண்டாம் பகுதி ஜெர்மனியில் வளர்ந்த பேரப்பிள்ளைகளின் தலைமுறையை குறிக்கின்றது.



இக் கண்காட்சியின் மைய கருத்துக்கமைய ஈழத்தமிழர்களின் அடையாளங்களையும்  அத்தோடு அவர்களின் புலம்பெயர் காரணிகளையும் கண்காட்சியாக வடிவமைத்து யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு வெளிக்காட்டி உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பேர்லினில் உள்ள Pankow மாவட்டத்தின் அருங்காட்சியகத்தில் இக் கண்காட்சி தொடர்ச்சியாக அமையப்பெறுகின்றது. இக் கண்காட்சி மாவட்ட முதல்வர் மதிப்பிற்குரிய திரு  Sören Benn அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் , பல்லின சமூகத்தின் இணைவாக்கத்துக்கான   Pankow மாவட்ட  அரச அலுவலகம் மற்றும் Bundesverband NeMO அமைப்பும்  இணைந்தே இக் கண்காட்சியை  முன்னெடுக்கின்றது.

“மாமா ஹசன்” நடமாடும் கண்காட்சி ஏற்கனவே  Dortmund, Hagen, Neuss und Düsseldorf-Garath நகரங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே  பேர்லின் நகரத்துக்கு வருகை தந்தது.

Leave a comment