ஜெனாத்ரியா கலைநிகழ்ச்சி: சவூதி அரேபியா வெளியுறவு துறை மந்திரியுடன் கண்டு களித்தார் சுஷ்மா ஸ்வராஜ்

264 0

சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் ஜெனாத்ரியா கலைநிகழ்ச்சியை அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அடில் அல் ஜுபிருடன், சுஷ்மா சுவராஜ் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் ஜெனாத்ரியா கலைநிகழ்ச்சியை அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அடில் அல் ஜுபிருடன், சுஷ்மா சுவராஜ் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

சவூதி அரேபியாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரியாத் அருகே உள்ள ஜெனத்ரியா என்ற இடத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியை அந்நாட்டு அரசு நடத்துகிறது. பண்டைய காலத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், 1985-ம் ஆண்டு முதல் மன்னர் தலைமையில் இந்த விழா நடைபெற்று வருகிறது.

ஓட்டக பந்தயம், குதிரை பந்தயம், நடனம், புத்தக கண்காட்சி, சவூதி அரேபிய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிகள் ஆகியவை இதில் இடம்பெறும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஜெனத்ரியா கலைநிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு மன்னர் சல்மான் இந்தியாவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள உற்பத்தி பொருள்களை பேட்டரி காரில் அமர்ந்தபடி, அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அடில் அல் ஜுபிருடன், சுஷ்மா சுவராஜ் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

இந்த கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் யோகா, இஸ்ரோ, டிஜிட்டல் இந்தியா ஆகிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

Leave a comment