சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு இன்று

390 0

SLFP-Logo-720x480ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் குருநாகல் – மாலிகாபிட்டியில் இடம்பெறவுள்ளது.

எஸ்.டிபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தலைமையில் 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உருவாக்கப்பட்டது.

இந்த கட்சி, முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் 1952ஆம் ஆண்டு போட்டியிட்டது.

இதன்போது 9 ஆசனங்களை பெற்றுக்கொண்டு எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற்றது.

1956ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற இந்த கட்சி அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தை பெற்றது.

இதன்போது மக்கள் ஐக்கிய முன்னணியும் இணைந்து சுதந்திர கட்சி தேர்தலில் போட்டியிட்டது.

1959ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எஸ்.டிபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டதன் பின்னர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைமைக்கு நியமிக்கப்பட்டார்.

இவர் 1960ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.

1970ஆம் ஆண்டு கூட்டு கட்சிகளுடன் சுதந்திர கட்சி தமது பலத்தை நிலைநிறுத்திக் கொண்டது.

1977ஆம் இடம்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரணதுங்க தலைமையில் ஆட்;சிக்கு வந்தது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையின் கீழ் பல தேர்தல்களில் பெற்றிப்பெற்ற சுதந்திர கட்சி, தற்போது ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் செயற்படுகிறது.