மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

4103 71

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை வீரகண்டிச்சேனை வயல் வாடியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி மாணிக்கப்போடி (58 வயது )என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இம்மரணம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் ஸ்தலத்திற்கு சமூகளித்திருந்தார்.

இதனைத் தொடா்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் கூறுகின்றனர்.

Leave a comment