தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை 50,000 ஆக உயர்வு: தமிழக அரசு

217 0

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அவர்களது படிப்பினை தொடர ஏதுவாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய மாணவர்கள் பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பை கடந்த 2015-16ம் ஆண்டில் ரூ.50,000-ல் இருந்து ரூ.72,000 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில், தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித்தொகை ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி
வழங்கப்படுகிறது.
முதல் பட்டதாரி சலுகை பெற்ற்றிருந்தாலும், தொழிற்கல்வி பயில முடியாமல் வறிய நிலையில் உள்ள மாணவர்களும் தொழிற்கல்வி உதவித்தொகை பெற்றிட, மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படுபவர்களையும் ஆய்வு செய்து அவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Leave a comment