ஜ.நா வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்துவிட்டு வெளியில் வந்த இரா.சம்மந்தன், எம்.ஏ.சுமந்திரனை காணாமல் போனவர்களின் உறவினர்கள் திட்டித்தீர்த்துள்ளனர்.
பான் கீ மூனை நேரடியாக தம்மை சந்திப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்காமல் தாம் வழமை போன்று இரகசிய சந்திப்பினை நடத்திவிட்டு வெளியில் வந்து நியாயம் பேச அவர்கள் வந்ததினாலேயே ஆத்திரமடைந்தவர்கள் அவர்கள் வெளிப்படையாகவே திட்டித்தீர்த்துள்ளனர்.
“பதவிக்காக மோசம் போன கூட்டம், கள்ளர் கூட்டம், பச்சை துரோகிகள், சமந்திரன் உன்னை கொடும்பாவி கட்டி எரித்தோமே எப்படி உயிர்த்தாய், உங்களின் கபட நாடம் எங்களுக்க தெரியும், பான் கீ மூனை வெளியில் வரச் சொல், நல்லாட்சி அரசாங்கத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு” இது போன்ற பல வசனங்களால் அவர்கள் சம்மந்தனையும், சுமந்திரனையும் வசை பாடியிருந்தனர்.
தம்மை காணாமல் போனவர்களின் உறவினர்கள் திட்டுவதை கண்ட இரா.சம்மந்தன் அங்கிருந்து உடனடியாகவே வெளியேறியிருந்தார். இருப்பினும் சுமந்திரன் அவர்கள் திட்டுகளை கேட்டுக் கொண்டு ஊடகங்களுக்கு தான் பான் கீ மூனை சந்தித்து பேசிய விடயங்கள் தொடர்பாக விபரித்திருந்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் செமயாக திட்டு வாங்கி தலைதெறிக்க ஓடிய சம்மந்தன், சுமந்திரன் (முழுமையான வீடியோ)
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

