தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்த ஒராண்டு காலம் தேவை

714 0

ranil-prathamar-720x480-720x480தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு காலம் தேவைப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஓராண்டு கால அவகாசம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சட்டத்தை அமுல்படுத்த 12000 பேரை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டியிருப்பதாகவும் 12000 பேரை பணியில் அமர்த்தி அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது சுலபமான காரியமன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ஆறு மாத காலத்தில் குறைந்தபட்சம் ஆறாயிரம் பேரை கடமையில் அமர்த்தி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் முக்கிய வாக்குறுதிகளில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டமானது கட்சி அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் கடந்த அரசாங்கத்தின் பல்வேறு குற்றச் செயல்கள் அம்பலமாகியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment