நாட்டில் தற்போதும் நடைமுறையிலுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும்-சிவஞானம்(காணொளி)

300 0

நாட்டில் தற்போதும் நடைமுறையிலுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் ஏன் முன்வைக்க முடியவில்லை என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடலை ஒலிக்க விடலாம் எனக்கூறும் அங்கஜன் இராமநாதனால், ஏன் அவர் சார்ந்திருக்கும் கட்சியில் ஜனாதிபதியாகவிருக்கும் மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டில் தற்போதும் நடைமுறையிலுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்க முடியவில்லை என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நித்திரையா தமிழா என்ற எழுச்சிப்பாடல் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், அப்பாடலின் முழுப்பதிப்புரிமையும் விடுதலைப்புலிகளுக்கே சொந்தமானது என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறானதொரு பாடலை ஒலிக்க விடலாம் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்தமை வரவேற்கத்தக்க விடயம் என்றும் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்டுள்ளதால் புலிகள் என்ற போர்வையில் கைதுசெய்யப்பட்டு இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment