மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத சேவை இடைநிறுத்தம்

228 0

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத காலத்திற்கு மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத போக்குவரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தப் போவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மதவாச்சி மற்றும் தலைமன்னார் வரையான புகையிரத மார்க்கத்தில் இருக்கின்ற பாலத்தின் புனர்நிர்மாணப் பணி காரணமாக இவ்வாறு புகையிரத போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று அந்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.

இதேவேளை மாத்தறை – கதிர்காமம் இடையிலான புகையிரத மார்க்கத்தின் பெலியத்தை வரையான பகுதி இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

எதிர்வரும் மே மாாதமளவில் மாத்தறையில் இருந்து கெகனதுரை வரையான புகையிரத பாதையை திறக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்ற மாத்தறை – கதிர்காமம் இடையிலான புகையிரத மார்க்கத்திற்காக 278.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படுகிறது.

இலங்கையின் மிக நீளமான சுரங்கப் பாதை மற்றும் மிக நீளமாக புகையிரத பாலம் ஆகியன இந்த புகையிரத மார்க்கத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளமை கூறத்தக்கது.

Leave a comment