“ தாஜுடீன், லசந்த, மகேஸ்­வரன் கொலை விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­துங்கள்”

215 0

வஸீம் தாஜுடீன், லசந்த விக்­ர­ம­துங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்­வரன் ஆகி­யோர்­களின் கொலை விசா­ரணை நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்தி அதன் உண்மை நிலை நாட்­டுக்குப் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுப்­பா­ராயின் மக்கள் அவரை மற்­று­மொரு தடவை நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக்­கு­வார்கள் என அமைச்சர் பி.  ஹெரிசன் தெரி­வித்­தார்.

பொல­ந­றுவை,ஹிங்­கு­ரான்­கொ­டயில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி அடிக்­கடி கருத்து தெரி­வித்து வரு­கிறார்.  அந்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அவர் பிர­த­ம­ரி­டமும் அனு­மதி கோரி­யுள்ளார். எனவே தவறு செய்­த­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதில் எவ்­விதப் பிரச்­சி­னையும் இல்லை. அதனை ஐக்­கிய தேசியக் கட்சி வர­வேற்­கி­றது.

ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான கொள்­கையில் ஐக்­கிய தேசியக் கட்சி என்றும் உறு­தி­யாக உள்­ளது. அது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளுக்கும் நாம் ஒத்­து­ழைப்பு வழங்­குவோம். மேலும் தற்­போது பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை வெளி­யா­கின்ற சந்­தர்ப்­பத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் அவ­ரது தரப்­பி­னரும் மண்­ணெண்ணெய் பட்ட சாரைப்­பாம்­புபோல் தவிக்­கின்­றனர்.  அவர்கள் செய்த பிழைகள் வெளி­வ­ர­வுள்­ள­த­னா­லேயே   இவ்­வாறு திண­று­கின்­றனர்.

மேலும் கடந்த காலங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஹெஜின் உடன்­ப­டிக்கை,மிக் விமான உடன்­ப­டிக்கை என்­ப­வற்­றுக்கும் ஆணைக்­குழு அமைத்து விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ காலத்தில் வெளி­நாட்டு வங்­கி­களில் பணம் வைப்­பி­லி­டப்­பட்­டி­ருப்பின் அவற்­றையும் நாட்­டுக்கு கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

அத்­துடன் வஸீம் தாஜுடீன், லசந்த விக்­ர­ம­துங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்­வரன் ஆகி­யோர்­களின் கொலை விசா­ரணை நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு அதன் உண்மை நிலை நாட்­டுக்குப் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அதற்­கான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுப்­பா­ராயின் மக்கள் அவரை மற்­று­மொரு தடவை நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு முன்­னிற்­பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment