பாலியல் தொல்லை விவகாரம்: அமெரிக்கா ஜிம்னாஸ்டிக் அணி அதிகாரிகள் கூட்டாக பதவி விலகல்

1004 0

பாலியல் தொல்லை புகாரில் சிக்கியதை தொடர்ந்து, அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் அணி அதிகாரிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர் என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் டாக்டராக செயல்பட்டு வந்தவர் லேரி நாசர் (54). மிச்சிகன் மாநில யுனிவர்சிட்டியிலும் வேலை பார்த்தவர். இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் வீராங்கனைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் இவர் மீது செக்ஸ் புகார் கூறியுள்ளார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, லேரி நாசருக்கு 175 வருடம், அதாவது 2,100 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் அணியின் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர் என ஜிம்னாஸ்டிக் அணி செய்தி தொடர்பாளர் லெஸ்லி கிங் நேற்று தெரிவித்துள்ளார்.

Leave a comment