சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில்

14676 339

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியில்
வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு பல்கலைகழகத்துக்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள், கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். அவர்கள் இருவரும் காயங்கள் ஏற்படாத போதும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார், தாக்குதலுக்குள்ளான
மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் 4 சிங்கள மாணவர்களைக் கைது செய்தனர். அவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர். மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் தற்போது அதிகரித்து வருவதால், விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் 4 மாணவர்களையும் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Leave a comment