பிரேசில் புதிய அதிபராக மைக்கேல் டெமர் பதவியேற்பு

302 0

201609011119482837_Michel-Temer-sworn-in-as-Brazil-s-new-president_SECVPFபிரேசிலில் முறைகேடு புகார் காரணமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபர் தில்மா ரூசெப் நீக்கப்பட்டு, புதிய அதிபராக மைக்கேல் டெமர் பதவியேற்றுள்ளார்.

பிரேசில் நாட்டில் தில்மா ரூசெப் (வயது 68), 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பதவி வகித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, வெற்றி பெறுவதற்காக நாட்டின் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று காட்டிக்கொள்வதற்காக, நாட்டின் வருமானத்தை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில் அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு பாராளுமன்றத்தில் குற்றத் தீர்மானம் கொண்டு வர பாராளுமன்றத்தின் சிறப்பு குழு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் கீழ்சபையில் குற்ற தீர்மானம் கொண்டு வர தயாரானபோது, சுப்ரீம் கோர்ட்டில் தில்மா ரூசெப் வழக்கு தொடுத்தார். ஆனால் அங்கே அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் தில்மா ரூசெப்பிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பாராளுமன்றத்தில் 81 உறுப்பினர்களில், 61 பேர் ரூசெப்புக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து தில்மா ரூசெப்பின் பதவி பறிக்கப்பட்டது. அதே நேரத்தில், தில்மா ரூசெஃப், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பொதுப் பதவிகளை வகிப்பதற்கு எதிராக தடை விதிப்பதில்லை என்று செனட் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். துணை அதிபராக இருந்த மெக்கெல் டெமர் (வயது 75) நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.

இதற்கிடையே தில்மா ரூசெப் பதவி நீக்கம் செய்யப்பட்டது வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகள் விமர்சனம் செய்தன. எனவே, அந்நாடுகளில் உள்ள தூதர்களை நாடு திரும்பும்படி பிரேசில் அழைத்துள்ளது. இதேபோல் வெனிசுலாவும் பிரேசில் நாட்டில் உள்ள தனது தூதரை திரும்ப பெற்றுள்ளது.