உயர் தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 274 பேருக்கு சகல பாடங்களிலும் ஏ

347 0

கடந்த 2017 ஆம் ஆண்டின் உயர் தரப் பரீட்சையில் வட மாகாண பாடசாலைகளிலிருந்து தோற்றியவர்களுள் 274 பேர் சகல பாடங்களிலும் “ஏ” தர திறமைச் சித்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்காக மொத்தம் 11591 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்தவர்கள் 8956 பேர் எனவும், சித்தியடையாதவர்கள் 816 பேர் எனவும் ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment