பாகிஸ்தான்: போலியோ முகாமில் பணியாற்றிய இரு பெண் ஊழியர்கள் சுட்டுக் கொலை

1 0

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று போலியோ சொட்டு மருந்து அளிக்கச் சென்ற இரு பெண் ஊழியர்களை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

பாகிஸ்தான் நாட்டில் போலியோ நோயை ஒழிப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தலைமையிலான தொண்டு நிறுவனம் ஏராளமான நிதியுதவி அளித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்பால் பாகிஸ்தானில் போலியோ நோய்சார்ந்த மரணங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன.
இந்நிலையில், இங்குள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 24 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் தீவிர போலியோ ஒழிப்பு முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இம்முகாமின் கடைசி நாளான இன்று குவெட்டா நகரில் உள்ள ஷால்கோட் பகுதியில் வீடுவீடாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் பணியில் சில பெண் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டதில் இரு பெண்கள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து சொட்டு மருந்து முகாமில் பணியாற்றும் ஊழியர்கள்மீது தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 84 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

மாலத்தீவு அதிபர் தேர்தல் – எதிர்கட்சியை சேர்ந்த இப்ராகிம் முகமது வெற்றி பெற்றதாக தகவல்

Posted by - September 24, 2018 0
மாலத்தீவில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் புதிய இந்திய தூதராக ரோன் மால்கா நியமனம்

Posted by - September 17, 2018 0
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அந்நாட்டுக்கான புதிய இந்திய தூதராக டாக்டர் ரோன் மால்காவை நியமனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உள் விவகாரங்களில் தலையீடு செய்ததாக கனடா, பிரேசில் தூதர்களை வெளியேற்றிய வெனிசுலா

Posted by - December 24, 2017 0
சட்டவிதிமுறைகளை மீறுதல் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் தலையிட்டதாக கூறி கனடா மற்றும் பிரேசில் தூதரக அதிகாரிகளை வெனிசுலா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு: ரூ.20 ஆயிரம் கோடி உயர்வு

Posted by - September 29, 2017 0
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடி உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திர…

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு

Posted by - December 1, 2017 0
44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது. “தீவிர முயற்சிக்கு பின்னரும்,…

Leave a comment

Your email address will not be published.