ஐ.ஐ.டி.கள் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும்: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

1 0

ஐ.ஐ.டி.கள் சமுதாயத்துக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட கருத்தரங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அதனை திறந்துவைத்து பேசியதாவது:-

கல்விநிறுவனங்கள், தொழிற்சாலைகள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் ஆராய்ச்சி பூங்காவை அமைத்துள்ளது. எனவே சென்னை ஐ.ஐ.டி.யை மாதிரியாக கொண்டு ஆராய்ச்சி பூங்காக்கள் உள்ள இந்தியாவின் மற்ற ஐ.ஐ.டி.களை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். ஐ.ஐ.டி.யில் சமுதாயத்திற்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடியுங்கள்.

புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பது இந்தியாவில் குறைவு. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தான் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் என்று நினைக்கிறோம். இந்தியாவில் நிறைய பேருக்கு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டு. ஆனால் அதற்கான சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும். அதற்காக முதல்கட்டமாக பள்ளிக்கூட அளவிலேயே ஆராய்ச்சியை மேற்கொள்ள முடிவுசெய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்திய அளவில் 2,400 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 800 பள்ளிகளில் ‘அடல் டிங்கரிங் லேப்’ தொடங்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளுக்கு தலா ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் இணையதள வசதி ஏற்படுத்துதல், ரோபோட்டிக் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனால் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல பள்ளிக்கூட அளவிலேயே ஆராய்ச்சி தொடங்கி உள்ளது. இவ்வாறு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

விழாவில் ரெயில்வே அமைச்சக ஆலோசகர் பேராசிரியர் அசோக் ஜூஞ்சன் வாலா, சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.

முன்னதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். அந்த கண்காட்சியில் இருந்த மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவில் ஏறி அவரே அதை சிறிது தூரம் ஓட்டினார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்ற ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பால் நிறுவனங்கள் தயாரித்துள்ள சாதனங்களை அவர் பார்வையிட்டார்.

Related Post

ஜெயலலிதா மரணம் – எடப்பாடி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Posted by - August 18, 2017 0
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி இதனை அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற…

மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரமுடியாது மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

Posted by - December 5, 2018 0
மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் பிரதமர் மோடி எந்த சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என திருச்சி ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - October 13, 2018 0
சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

தமிழகத்தில் 900 அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லை

Posted by - December 14, 2017 0
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் 900 பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும்…

எனக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது: தீபா

Posted by - March 12, 2017 0
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.