கோர விபத்து – நால்வர் பலி – 7 பேர் வைத்தியசாலையில்

311 0

3தம்புள்ளை கலேவேல யடிகல்பொத பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியானதுடன் 7 பேர் படுங்காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் வண்டியொன்றும் வேனொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்தறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 5