ஆப்கன்: இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீச்சு

227 0

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலால் பணியாளர்களுக்கு பாதிப்பு இல்லை என வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலால் பணியாளர்களுக்கு பாதிப்பு இல்லை என வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இன்று ராக்கெட் குண்டு விழுந்துள்ளது. இந்திய தூதரகத்தின் மிக அருகே உள்ள வேலியில் இந்த குண்டு விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தாக்குதலால் இந்திய பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்வா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

தூதரக கட்டிடத்தில் சேதங்கள் இல்லை என வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உயர் பாதுகாப்பு பகுதியான இங்கு இந்திய தூதரகத்தை குறிவைத்து ராக்கெட் குண்டு வீசப்பட்டதா? என்பது தெளிவாக தெரியவில்லை.

Leave a comment