உலகத் தமிழாராய்சி மாநாட்டுப் படுகொலை நினைவிடம் துப்புரவு செய்யப்பட்டிருக்கவில்லை!

226 0

1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக தமிழாராய்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 11 பேரின் நினைவு தினம் இன்றாகும். அவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபிப் பகுதி இன்று காலை 9 மணிவரை பகுதியளவில் கூட எந்தத் தரப்பினராலும் துப்புரவு செய்யப்பட்டிருக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

திடீரென இன்று காலை 09.25 மணிக்கு வந்திறங்கிய நாலு பேர் ஆங்காங்கே புல்லு பிடுங்கிய நிலையில் நினைவிடத்தில் காலை 10.05 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாகாண சபை அமைச்சர் ஒருவர் மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் , யாழ். மாநகர சபை வேட்பாளர் ஒருவர் என 16 பேர் வந்து சுடரேற்றிச் சென்றுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாநகரசபையைக் கைப்பற்றுவதற்கு கட்சிகள் கங்கணம் கட்டியுள்ளன.

யாழ் மாநகர முதல்வர் பதவி எமக்குவேண்டும் என கட்சிகளுக்கு இடையேயும் கட்சிக்குள்ளும் போட்டி நிலவும் இந்த நிலையில் அவர்களில் எவருக்கும் தமிழ் உணர் கிடையாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு கட்சிபேதமின்றி அனைவரும் ஒன்றிணைவோம் என இளைஞர் அணி அழைப்புவிடுத்து உணர்வுபூர்வ அஞ்சிலியை முன்னெடுத்தது. நினைவு தினத்துக்கு முதல் நாளே நினைவுத் தூபிப் பகுதி சிரமதானம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு தேர்தல் இடம்பெறவுள்ளதால் அந்த இளைஞர் அணியும் கட்சி அரசியலை மையப்படுத்தி உலக தமிழாராச்சி மாநாடு படுகொலை நினைவேந்தலை கைவிட்டிருந்தது.

Leave a comment