எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு: சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்

211 0

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அதன்பின்னர் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ் உயர்வுக்கு வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதன்படி, எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55000-ல் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.  விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக கந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment