தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

342 0

கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடியுள்ளது.

ஆர்.கே நகர் தோல்வியை அடுத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை, தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது ஆகியவை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடியது.

அண்ணா அறிவாலயத்தில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன், துரை முருகன் ஆகிய முன்னணி தலைவர்களுடன் 63 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a comment