தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

31482 96

வவுனியா, கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை நேற்று மதியம் வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.

கண்ணாட்டி கணேசபுரத்தில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் பெண்ணொருவர் தூக்கில் தொங்குவதை அவதானித்த பொதுமகனொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா பொலிஸார் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a comment