கடந்த வருடத்தில் மாத்திரம் 3755,0686,437 ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு

222 0

கடந்த 2017 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் டிசம்பர் இறுதி  வரையிலான காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 3755,0686,437 ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு  அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுள், ஹெரோயின், சட்டவிரோத புகையிலை, மதுபானம், கஞ்சா போன்றன பிரதானமானவை. இப்போதைப்பொருட்களை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் போதைப்பொருள் மற்றும் பாரதூரமான குற்றங்களை தடுக்கும் பிரிவினரும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை பொதுமக்கள் முன்னிலையிலேயே அழிப்பதற்கு தேவையான சட்டங்களை அரசாங்கம் தற்பொழுது தயாரித்து வருவதாகவும் அமைச்சர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுவதை ஊடகங்களில் காண்பதாகவும், அவை எங்கு செல்வது என்பது தொடர்பில் சந்தேகம் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களில் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் அனைத்தும் மீண்டும் பின்கதவால் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் சந்தைக்குச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment