ஆளுநர் உரையில் கல்வி துறையில் புரட்சிகர திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

205 0

தமிழகத்தில் கல்வி துறையில் புரட்சி ஏற்படுத்தப்படும் எனவும் ஆளுநர் உரையில் கல்வி துறையில் புரட்சிகர திட்டங்கள் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி வெள்ளி விழாவில் கலந்துகொண்ட பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை. தமிழக முழுவதும் உள்ள 5 கோடி மாணவர்கள் தலா 5 மரம் வீதம் வளர்க்க வேண்டும். 5 மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க ஆலோசனை செய்யப்படும்.

தமிழகத்தில் கல்வி துறையில் புரட்சி ஏற்படுத்தப்படும். ஆளுநர் உரையில் கல்வி துறையில் புரட்சிகர திட்டங்கள் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட 42 திட்டங்களில் 40 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

மீதம் உள்ள 2 திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். ரூ.2 கோடி மதிப்பில் 123 நூலகங்கள் புதுப்பிக்கப்படும். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சரிடம் கேளுங்கள். தேர்வு மையங்கள் கூடுதலாக 512 புதியதாக உருவாக்கப்பட்டு உள்ளது. 25 கிலோ மீட்டராக இருந்த தேர்வு மையம் 10 கிலோ மீட்டருக்கு ஓன்று என மாற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment