பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனம் மீதான தடை மேலும் நீடிப்பு

385 0

பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று 05ம் திகதி முதல் பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனத்திற்கான தடை மேலும் நீடிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி அந்த நிறுவனத்திற்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு முதன்மை விநியோகஸ்தராக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் நேற்று இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment