ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கட்சி மாநாடொன்று எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த மாநாடு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் 8000 வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த செம்டெம்பர் மாதம் இரத்தினபுரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறாமையினால் குறித்த மாநாடு எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான சம்பிக்க ரனவக, மனோ கனேசன், பழனி திகாம்பரம், ரிசார்ட் பதியுதீன், ரவூப் ஹகீம், ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

