2017 / 2018 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரமே மேற்கொள்ளமுடியும் எனவும் குறித்த கையேட்டில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 30ஆயிரத்து 500 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
2017ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் 1 இலட்சத்து 63ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை பெற்றுக்கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.

