அமைதி வழியில் போராடி வரும் மக்களை கைது செய்து வரும் ஈரான் அரசுக்கு அமெரிக்க அரசு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால், அமைதியான வழியில் போராடி வரும் அவர்களை அந்நாட்டு அரசு சிறையில் அடைத்து வருகிறது.
இதற்கிடையே, அமைதியான வழியில் போராடும் மக்களை கைது செய்யும் ஈரான் அரசுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், அடிப்படை உரிமைகளை கேட்டு போராடி வரும் ஈரானிய மக்களுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் உண்டு. அவர்கள் விரும்பிய அனைத்தும் கிடைக்க வேண்டும். போராட்டத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

