திருப்பூர், புதுக்கோட்டை, தர்மபுரி மாவட்ட தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம்

315 0

அ.தி.மு.க.வில் இருந்து 3 மாவட்ட தினகரன் ஆதரவாளர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

திருப்பூர் சி.சிவசாமி (முன்னாள் எம்.பி.), ஏ.விசாலாட்சி (தலைமைச் செயக்குழு உறுப்பினர், மகளிர் அணி துணைச் செயலாளர்), ஆர்.ஜோதிமணி (மாவட்ட இணைச் செயலாளர்),பி.வெங்கடாசலபதி (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்), எஸ்.கே.தங்கமுத்து (மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர்), ஏ.எம்.சதீஸ் (மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்).

பி.ராஜ்குமார் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர்), தண்ணீர்பந்தல் பி.தனபால் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர்), ஆர்.துரைக் கண்ணன் (மாவட்ட மாணவர் அணி தலைவர்), டி.ஆனந்த் (மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர், அவினாசி எம்.காஞ்சனா (மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர்).

ஆர்.மோகன் தம்பி (மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர்), ரமேஷ் (எ) என்.பழனிசாமி (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத்தலைவர்), எஸ்.முத்துக்குமார் (பல்லடம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்).

தங்கராஜ் (திருப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்), கண்ணப்பன் (எ) சிவக்குமார் (தெக்கலூர் ஊராட்சிக் செயலாளர், அவினாசி தெற்கு ஒன்றியம்), எம்.சேகர் (லட்சுமி நகர் கிளை செயலாளர்), தெற்கு அவினாசி பாளையம் ஊராட்சி, பொங்கலூர் ஒன்றியம்).

கே.விஸ்வநாதன் (திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயலாளர்), ஆனந்த் திருமுருகன் (பூண்டி 7-வது வார்டு), யவனகதிரவன் (பல்லடம் நகர 13-வது வார்டு செயலாளர்), வேலுசாமி (இடுவாய், 58-வது வட்டம், வீரபாண்டி பகுதி), பி.லோகநாதன் (காளிபாளையம் திருப்பூர் ஒன்றியம், பி.எல்.சிவக்குமார் (பெருமாநல்லூர், திருப்பூர் ஒன்றியம்).

மூர்த்தி (வேட்டுவபாளையம் ஊராட்சி, அவினாசி தெற்கு ஒன்றியம்), களஞ்சியம் பொன்னுசாமி (கருவம்பாளையம்), கேபிள் விஜயகுமார் (13-வது வட்டம், காலேஜ் ரோடு, ராயபுரம் பகுதி), ஜாகீர் உசைன் (44-வது வட்டம், காங்கேயம் சாலை), சூர்யா செந்தில் (கோல்டன் நகர் 23-வது வட்டம்).

பி.பி.சிவனேசன் (ஒன்றிய பொருளாளர்), மகேஸ்வரி தண்டபாணி (ஒன்றிய மாவட்ட பிரதிநிதி). ஏ.எஸ்.பாலன் (எ) பாலுசாமி (ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்), வி.பிரபு (தண்டுக்காரம்பாளையம் கிளை செயலாளர்).

கே.கண்ணன் (முதலிபாளையம் புதிய ஆதிதிராவிடர் காலனி கிளை செயலாளர், பாப்பாங்குளம் ஊராட்சி), கே.எஸ். பழனிசாமி (பஞ்சலிங்கம் பாளையம் கிளை செயலாளர், பாப்பாங்குளம் ஊராட்சி), எம்.செல்வராஜ் (கானூர் ஊராட்சி), எம்.மாரிமுத்து (பேரநாயகம்பாளையம், மங்கரசு, வலையபாளையம் ஊராட்சி).

என். வெங்கடேஷ் (ஒன்றிய துணைச் செயலாளர்) கே.பி. நாகராஜ் (கரப்பாளையம் கிளை செயலாளர், அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி), கே.சரவணன் (கோவை சாலை, அன்னூர்), ராமமூர்த்தி (பிஞ்சமடை, வடக்கலூர் ஊராட்சி).

எஸ்.கே.டி.சண்முகம் (வார்டு கழக முன்னாள் செயலாளர் 1-வது வட்டம்), கலாவதி உத்ராவதி (குமரானந்தபுரம், (8-வது வட்டம்), உத்ராபதி (8-வது வட்டம்)

கோமதி நடராஜன் (29-வது வட்டம், பிச்சம்பாளையம்), கோமதி (29-வது வட்டம், பிச்சம்பாளையம்), சி.ஆர். குமார் (19-வது வட்டம்), ரிஹானாபானு (20-வது வட்டம்)

கே.செல்வம் (முன்னாள் கவுன்சிலர், 42-வது வட்டம்), மாரிமுத்து (50-வது வட்டம், தென்னம்பாளையம்), டி.தெய்வசிகாமணி (எ) சென்டவின்மணி (தாராபுரம் ரோடு, கருவம்பாளையம் பகுதி)

டி.பார்த்திபன், (பகுதி புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்), பிரின்ட் பீல்டு தம்பி (எ) வி.சுப்பிரமணியம் (32-வது வட்ட செயலாளர்), முத்துக்குமார் (12-வது வட்டம்), ஏ.கிரிதரன் (சாதிக்பாட்சா நகர்).

எம்.கோபாலகிருஷ்ணன் (பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்), பி.விஜயகுமார் (பகுதி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்) ஜெகநாதன் (தலைவர், விஜயாபுரம் விவசாய கூட்டுறவு கடன் சங்கம்), டி.ஆர்.தங்கராஜ் (ராக்கியாபாளையம்), எஸ்.என்.நடராஜ் (38-வது வட்டம்), சுதாகர் (40-வது வட்டம்)

எஸ்.என்.உதயம் மணி (பேரூராட்சி துணை செயலாளர்), ஏ.பி.குப்புசாமி (பேரூராட்சி முன்னாள் அவை தலைவர்), ஏ.ஆர்.முகமது அஜீம் (15-வது வார்ட மேலமைப்பு பிரதிநிதி)

ஜி.கண்ணம்மாள் (பேரூராட்சி துணை செயலாளர்), கே.சரவண மூர்த்தி (பேரூராட்சி மாவட்ட பிரதிநிதி, ஜி.கே.நாகராஜன் (15-வது வார்டு செயலாளர்)

ஆர்.அசோக்குமார் (வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்) டி.கே.ராஜேந்திரன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்) பூக்கடை எம்.முனுசாமி (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்) டி.ராஜசேகர் (மாவட்ட மாணவர் அணி செயலாளர்)

எஸ்.பி.முனுசாமி (மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர்) ஆர்.ரமேஷ் (மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்)

ஜே.இந்திராகாந்தி (பொதுக்குழு உறுப்பினர், பென்னாகரம் தொகுதி பென்னாகரம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர்),

ரத்தினம் கந்தசாமி (பொதுக்குழு உறுப்பினர், அரூர் தொகுதி), பி.பச்சியப்பன் (பொதுக்குழு உறுப்பினர், தருமபுரி தொகுதி), டி.எம்.பெரியசாமி (தருமபுரி வடக்கு ஒன்றிய செயலாளர்), எஸ்.பாஸ்கர் (தருமபுரி தெற்கு ஒன்றிய செயலாளர்)

எம்.எம்.தன்ராஜ் (ஏரியூர் ஒன்றிய செயலாளர்), ஆர்.பார்த்திபன் (மொரப்பூர் ஒன்றிய செயலாளர்), ஜி.எஸ்.குப்புசாமி (கடத்தூர் ஒன்றிய செயலாளர்), வி.சி. கவுதமன் (பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர், பி.சசிக்குமார் (கடத்தூர் பேரூராட்சி கழக செயலாளர்), எம்.எப்.டோமினிக், (பொ.மல்லாபுரம் பேரூராட்சி செயலாளர், எஸ்.திருவேங்கடம் (அரூர் பேரூராட்சி செயலாளர்)

தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.ஆர்.முருகன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

பரணி இ.ஏ.கார்த்திகேயன் (மணமேல்குடி ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர்), எம்.ராதாகிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்), என்.குணசேகரன் (மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்), ஆர்.சுபத்ராதேவி (தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்),

எம்.பி.நடேசன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்), ஆர்.சீனி (எ) மதிவாணன் (மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவைப் பொருளாளர்), ஓ.கார்த்தி பிரபாகரன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்), ஏ.வீரமணி (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்), ஏ.ரவிச்சந்திரன் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்), கே.செந்தில்குமார் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்),

எஸ்.எம்.அலிஅக்பர் (மணமேல்குடி ஒன்றியக் கழக செயலாளர்), க.சிவசண்முகம் (அறந்தாங்கி நகர செயலாளர்), வி.முருகேசன் (விராலிமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர், அண்ணாநகர்), ஏ.வெள்ளைச்சாமி (அன்னவாசல் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர அணி இணைச் செயலாளர்), க.ராஜ்குமார் (அறந்தாங்கி வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்),

ஆர்.சின்னையா (திருமயம் ஒன்றிய இலக்கிய அணித் தலைவர்), சி.ராமலிங்கம் (குன்றாண்டார்கோவில் ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளர்), ஏ.என்.இளங்கோ (ஆலங்குடி பேரூராட்சி புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளர்), என்.முத்து (புதுக்கோட்டை ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர், கல்லுக்காரன்பட்டி), எஸ்.ஜி.செங்கொடியான் (கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் வார்டு உறுப்பினர்), எஸ்.அண்ணாதுரை (குன்றாண்டார்கோவில் ஒன்றியக் முன்னாள் செயலாளர்), ஓ.தனம் (குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்), கே.முருகேசன் (மழையூர் ஊராட்சி செயலாளர், கறம்பக்குடி ஒன்றியம்), வி.ஆர்.ராஜேந்திரன் (நெய்வாசல் ஊராட்சிக் கழகச் செயலாளர், திருமயம் ஒன்றியம்), எம்.பாஸ்கர் (தீத்தானிப்பட்டி ஊராட்சி செயலாளர் கறம்பக்குடி ஒன்றியம்), எம்.சதக்கத்துல்லா (கறம்பக்குடி பேரூராட்சி 5-வது வார்டு கழகச் செயலாளர்), ஆர்.கிருஷ்ண மோகன் (பாண்டிபத்திரம் மேற்கு கிளைக் கழகச் செயலாளர் ஆவுடையார் கோவில் ஒன்றியம்), குழ.சண்முகம் (ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், செரியலூர், திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம்)

ஆர்.என்.சத்தியமூர்ததி (கூட்டுறவு சங்கத்தலைவர், பாச்சிக்கோட்டை, திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம்), பா.நேசராசு (வம்பன் கூட்டுறவு சங்கத் தலைவர், திருவரங்குளம் மேற்கு ஒன்றியம்), த.செல்வராஜ் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் வார்டு உறுப்பினர், செங்கமார் கோங்குடி, அறந்தாங்கி தெற்கு ஒன்றியம்),

சி.செல்லக்கண்ணு (முன்னாள் செயலாளர், பரிவீரமங்களம், ஆவுடையார்கோவில் ஒன்றியம்), எம்.அசோகன் (நிஜாம்காலனி, புதுக்கோட்டை), டி.ஆர்.ரவி (ஆலங்காடு, திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம்), டி.விடங்கர் (மாங்காடு, திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம்), சத்யாலெனின் (பள்ளத்தி விடுதி), என்.குணசேகரன் (கைக்குறிச்சி), ஆர்.ராஜசேகர் (ஜானகி நகர், புதுக்கோட்டை), ஏ.எஸ்.கருணாநிதி (பி.மாத்தூர், மணவிடுதி, புதுக்கோட்டை), எம்.ஆர்.அன்பு (புதுப்பட்டி), எம்.எஸ்.பி.துரை (எ) சிவசுப்பிரமணிய சேதுபதி (கீரமங்கலம்), சரவணன் (அரிமளம் பேரூராட்சி), எஸ்.பாரதிராஜா (பொன்னமராவதி பேரூராட்சி), சி.நடராசன் (அன்னவாசல் பேரூராட்சி), எம்.டி.முருகேசன் (விராலிமலை கிழக்கு ஒன்றியம்), கே.ராமநாதன் (திருவரங்குளம் ஒன்றியம்), எம்.ஆர்.குமாரவேலன் (குளத்துப்பட்டி, திருமயம் ஒன்றியம்), எஸ்.பஹருதீன் (தெற்கு 3-ம் வீதி, புதுக்கோட்டை), வி.கிரகனசுந்தரி (மருந்தாந் தலை, அன்னவாசல் ஒன்றியம்)

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனக்கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்கள்.

Leave a comment