‘ஒக்கி’ புயல் பாதிப்பு: மத்திய அரசிடம் ரூ. 213 கோடி நிவாரண தொகை!

216 0

ஒக்கி’ புயல் நிவாரண நிதியாக மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை வாரியத்திடம் சென்னை மாநகராட்சி ரூ. 213 கோடி நிவாரண உதவி கேட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 30-ந் தேதி ‘ஒக்கி’ புயல் தாக்கியது. அதில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அங்கு புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3 பேர் அடங்கிய மத்திய குழு நேற்று நேரில் ஆய்வு செய்தது. ஒக்கி புயலின் போது சென்னையில் பெருமளவில் தண்ணீர் தேங்கிய 2 இடங்களை அவர்கள் நேரில் பார்த்தனர்.

இந்த நிலையில் ‘ஒக்கி’ புயல் நிவாரண நிதியாக மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை வாரியத்திடம் சென்னை மாநகராட்சி ரூ. 213 கோடி நிவாரண உதவி கேட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மாநகராட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த தொகை மூலம் பாதிக்கப்பட்ட இடங்களில் சேதம் அடைந்த சாக்கடை வடிகால், இடிந்த வீடுகள், கட்டிடங்கள் மற்றும் சேதம் அடைந்த பூங்காக்கள், ரோடுகள், மறுசீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டேரி நுல்லா மற்றும் ஈ.வி.கே.சம்பத் சாலை பகுதிகளை மத்திய குழுவினருடன் சென்று பார்வையிட்ட பிறகு இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில அரசிடம் சென்னை மாநகராட்சி புயல் நிவாரண நிதியாக ரூ. 256 கோடி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது.

Leave a comment