சாரதி இன்றி இயங்கிய பஸ்: 5 வாகனங்களுக்கு சேதம்

801 0
வவுனியாவில் நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று, சாரதி இன்றி இயங்கியதால் கார் ஒன்று, நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

கொழும்பில் இருந்து சென்ற குறித்த பஸ்ஸை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு, எஞ்சினை நிறுத்தாமல், அருகில் இருந்த ஏடிஎம் இயந்திரத்திற்கு, பணம் எடுப்பதற்காக சாரதி சென்றுள்ளார்.

இந்தநிலையில், அந்த பஸ் சாரதியின் கட்டுப்பாடு இன்றி இயங்கி சுமார் 70 மீற்றர்கள் வரை முன்னோக்கிச் சென்றுள்ளது.

இதன்போது கார் ஒன்று, நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் குறித்த பஸ் மோதி விபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விபத்துக்குள்ளான ஐந்து வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, சாரதியின்றி பஸ் இயங்குவதை கண்ணுற்ற, முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் விரைந்து செயற்பட்டு, பஸ்ஸின் கதவினை திறந்து உள்ளே சென்று அதனை நிறுத்தியுள்ளார்.

இதனால் பாரிய விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment