வெனிசூலா நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் நிர்ணய சபை தடை

11970 0

வெனிசூலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு ஆதரவான அரசியல் நிர்ணய சபை, 2018-ம் ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

வெனிசூலா நாட்டில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தலை அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இப்படி உள்ளாட்சி தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அதிபர் நிக்கோலஸ் மதுரோ (வயது 55), நாட்டில் இனி நடத்தப்படுகிற தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிட அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

இந்த நிலையில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு ஆதரவான அரசியல் நிர்ணய சபை, 2018-ம் ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.இந்த முடிவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி டுவிட்டரில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசூலா அரசும், அதன் சட்டப்பூர்வமான அரசியல் நிர்ணய சபையும் இணைந்து செல்லத்தக்க விதத்தில் விதிகளை உருவாக்கி வருகின்றன. இது ஜனநாயகம் அல்ல” என கூறப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டு தேர்வு ஆவதற்கான வாய்ப்பு கனிந்துள்ளது.

Leave a comment